கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகின்றன. ஹார்லி டேவிட்சன், டுகாடி, பிஎம்டபிள்யூ மோட்டோரேட் மற்றும் டிரையம்ஃப் போன்ற உலகின் பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே கால் பதித்து விட்டன. இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ‘க்ளீவ்லேண்ட் சைக்கிள் வெர்க்ஸ்’’ (Clevelad CycleWerks) என்ற நிறுவனம் இம்மாதம் முதல் இந்தியாவில் செயல்பட துவங்கும் என அறிவித்துள்ளது.
‘க்ளீவ்லேண்ட் சைக்கிள் வெர்க்ஸ்’ இத்துறையில் புதிதாக களமிறங்கியுள்ள ஒரு நிறுவனம் ஆகும். கடந்த 2009ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம், 2010ல் தனது முதல் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. உலகில் 25 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பெரும்பாலான உதிரிபாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்நிறுவனம், 125 சிசி முதல் 450 சிசி வரையிலான திறன்கொண்ட பைக்குகளை சந்தைப்படுத்துகிறது.
இந்நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களும், ஒற்றை சிலிண்டர் கொண்ட பழைய ஹோண்டா இன்ஜின்களை அடிப்படையாக கொண்டவை. இந்நிறுவனம், இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த லைஷ்-மேடிசன் மோட்டார்வெர்க்ஸ் (Laish-Madiso MotorWerks) என்ற நிறுவனத்துடன் இணைந்து, கூட்டணி வைத்து செயல்பட உள்ளது. இந்நிறுவனம், முதலில், ஹீஸ்ட் (Heist), ஏஸ் (Ace), மிஸ்ஃபிட் (Misfit), எஃப்எக்ஸ்ஆர் (FXr), ஹூலிகன் (Hooligu) ஆகிய 5 மாடல்களில் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ஹீஸ்ட்’’ (Heist) மோட்டார் சைக்கிள், குறைந்த டிசைன் கொண்ட ஒரு நேக்கட் பைக் ஆகும். இதில், 14.8 பிஎச்பி ஆற்றலையும், 15.8 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 230 சிசி இன்ஜின் உள்ளது. ரெட்ரோ கிளாசிக் டிசைன் கொண்ட ஏஸ் (Ace) ஒரு கம்யூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஆகும். ஹீஸ்ட் மாடலில் உள்ள அதே வகை இன்ஜின் இதிலும் உள்ளது. ஸ்ரேண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கும். டீலக்ஸ் வேரியண்டில் பிரீமியம் வகை உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மிஸ்ஃபிட் (Misfit) என்பது ஒரு கேஃபே ரேசர் வகை மோட்டார் சைக்கிள் ஆகும். இதில், 16.3 பிஎச்பி ஆற்றலையும், 18 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 223 சிசி இன்ஜின் உள்ளது. எஃப்எக்ஸ்ஆர் (FXr) மற்றும் ஹூலிகன் (FXr) ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களுமே மவுண்டெய்ன் மற்றும் டர்ட் வகை மோட்டார் சைக்கிள் மாடல்களின் கலப்பாகும். இவை இரண்டிலுமே 8.3 பிஎச்பி ஆற்றலையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 124 சிசி இன்ஜின் உள்ளது.
இந்த வரிசையில், கடைசி மாடலான ஹூலிகன் (Hooligu) டூயல் ஸ்போர்ட் எண்டூரோ வகையிலான பெரிய அளவு இன்ஜின் கொண்ட மோட்டார் சைக்கிள் ஆகும். இதில், 43.5 பிஎச்பி ஆற்றலையும், 42.5 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 449 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. ஹூலிகன் மோட்டார் சைக்கிள் ஆர் மற்றும் எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், ஆர் வேரியண்டில் டூயல் ஸ்போர்ட் டயர்களுடனும், எக்ஸ் வேரியண்ட் ஆஃப் ரோடிங் பைக்காகவும் இருக்கும்.
க்ளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ் நிறுவனம் அதன் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் இந்நிறுவனம் ஒரு தொழிற்சாலையையும் நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் மோட்டார் சைக்கிள் இம்மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.
FLIPKART
Monday, 3 July 2017
இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!
ஐபோன் விலை 7.5% வரை குறைப்பு
ஐபோன் விலையை மாடலுக்கு ஏற்ப 7.5 சதவீதம் வரை குறைத்து ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. புதிய விலை பட்டியலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஐபோன் 7 பிளஸ் 256 ஜிபி மாடல் ரூ.92,000ல் இருந்து ரூ.85,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் 32 ஜிபி ரூ.46,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலையை விட இது 6.2 சதவீதம் குறைவு. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது துவக்க நிலை மாடலான ஐபோன் எஸ்இ-ஐ பெங்களூருவில் விஸ்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கிறது. இது சுமார் 4 சதவீதம் விலை குறைந்துள்ளது.
ஐபோன் எஸ்இ 32ஜிபி மாடல் ரூ.27,200ல் இருந்து ரூ.26,000 ஆகவும், 128 ஜிபி மாடல் 6 சதவீதம் குறைந்து ரூ.35,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் விலையை குறைத்துள்ளதாக தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலைக்குறைப்பு இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. ஆனால், விலை குறைப்புக்கு பிறகும் ஐபோன்களின் விலை பிற உயர்ரக ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்தான். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 2.6 சதவீத இடத்தை ஐபோன்கள் பிடித்துள்ளன. ரூ.30,000க்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையில், ஐபோன்களின் பங்களிப்பு 43 சதவீதமாக உள்ளது.
'மெர்சலுக்கு ரூ.30 கோடி! விஜய் டிவியை வென்ற ஜீடிவி
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி ரூ.30 கோடி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய்-அட்லி கூட்டணியில் வெளியான 'தெறி' மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதே கூட்டணியில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற விஜய் டிவியும் ஜீ டிவியும் கடுமையாக போட்டியை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் ரூ.30 கோடிக்கு ஜீடிவி உரிமையை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
சாட்டிலைட் உரிமையின் விலை இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருப்பது விஜய்யின் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
’கோலிசோடா’ கிஷோர் நாயகனாக நடிக்கும் ‘உறுதி கொள்’
‘பசங்க’, ‘கோலிசோடா’ போன்ற படங்களில் சிருவன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிஷோர், ‘உறுதிகொள்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
ஏ.பி.கே. பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
பாண்டி அருணாசலம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜூட் வினிகர் இசையமைக்க எம்.ஜேபி எடிட்டிங் செய்கிறார். மணிஅமுதன் பாடல்கள் எழுத, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். எஸ்.எஸ்.ஸ்ரீதர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, பி.அய்யப்பன், சி.பழனி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
’நெடுஞ்சாலை’ படத்தில் இயக்குநர் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.அய்யனார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் குறித்து இயக்குநர் அய்யனார் கூறுகையில், ”பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது, சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல், பருவ மாற்றம் ஏற்படுகிற கால கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை. காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தான் படத்தின் கதை.
படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள். இதை காதல் மோதல் செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.
விரைவில் படம் வெளியாக உள்ளது.” என்றார்.
ஜூலை 21-ல் சிவாஜி மணிமண்டபம் திறப்பு
சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபத்தின் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை காட்டிராக்டருக்கு பொதுப்பணித்துறை வழங்கி உள்ளது.
நான்கு வாயில்களை கொண்ட இந்த மணிமண்டபத்தின் நடு நாயகமாக சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்படத்தில் சிவாஜி வாழ்க்கையை சொல்லும் புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
வருகிற ஜூலை 21-ம் தேதி சிவாஜி பிறந்த நாள். அன்று மணிமண்டபம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதல்வர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள், சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்காக ஹீரோ வாய்ப்பை விட்டுக் கொடுத்த டி.எஸ்.பாலையா
1948ம் ஆண்டு வெளிவந்த படம் மோகினி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர் டி.எஸ்.பாலையா. அப்போது குணசித்ரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.
இரண்டாவது நாயகனாக எம்.ஜி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் அப்போது வளர்ந்து வரும் நடிகர். மோகினியில் தான் ஹீரோவாக நடித்தால் தன் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையும் என்று எம்.ஜி.ஆர்., நினைத்தார். அவர் ஜூபிடர் பிலிம் அதிபர் எம்.சோமசுந்தரத்தை அணுகி தன்னை ஹீரோவாக போடும்படி கேட்டார் அதற்கு அவர் "பாலையாவை முடிவு செய்துவிட்டோம். அவர் சம்மதித்தால் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்" என்றார்.
அன்றே டி.எஸ்.பாலையாவை சந்தித்த எம்.ஜி.ஆர்., தன் ஆசையை கூறினார். "நான் இதில் ஹீரோவாக நடித்தாலும் அடுத்து என்னை வில்லனுக்குத்தான் கூப்பிடுவார்கள். நீ வளர வேண்டிய பையன் நீயே ஹீரோவாக நடித்துக் கொள்" என்று கூறி பாலையா இரண்டாவது நாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். எம்.ஜி.ஆர் ஜோடியாக வி.என்.ஜானகி நடித்தார். லங்கா சத்யம் இயக்கிய இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. தனக்கு டி.எஸ்.பாலய்யா செய்த உதவிக்காக பல கட்டங்களில் எம்.ஜி.ஆர், அவருக்கு உதவி செய்து வந்தார்.
25 வருடங்களாக விஜய்யுடன் நட்பு தொடர்கிறது. பிரபல நடிகை
25 வருடங்களாக விஜய்யுடன் நட்பு தொடர்கிறது. பிரபல நடிகை
இளையதளபதி விஜய் நடித்த ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை யுவராணி. விஜய்யும், யுவராணியும் விளையாடும் கபடிப்போட்டி இந்த படத்தில் பிரபலம்
இந்த நிலையில் நடிகை யுவராணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கடந்த 1993ஆம் ஆண்டில் இருந்து விஜய்யுடன் தனது நட்பு தொடர்ந்து வருவதாகவும் ஒவ்வொரு பிறந்த நாளின்போது விஜய் எனக்கு வாழ்த்து கூறுவதும் நான் அவருக்கு வாழ்த்து கூறுவதும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்த யுவராணி தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் பிசியாக உள்ளார்
தல அஜித்தை சந்தித்து புகைப்படம் வெளியிட்ட நடிகை கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பரபரப்பாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நடிகை கஸ்தூரி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் தன்னுடைய கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவிப்பதோடு, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார். கஸ்தூரியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் வருகின்றன. அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகின்றன.
தற்போது நடிகை கஸ்தூரி, நடிகர் தல அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நடிகர் அஜித் விவேகம் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் உள்ளார் என அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
சிறந்த எண்டெர்டெய்னர் விருதுபெற்ற விஜய்
சைமா திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த எண்டெர்டெய்னர் விருதைப் பெற்றுள்ளார் விஜய்.
அபுதாபியில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற 'சைமா அவார்ட்ஸ் 2017' நிறைவடைந்தது. தென்னிந்திய நட்சத்திரங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில், ரன்பிர் கபூர், கத்ரினா கைஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா), சிறந்த பாடலாசிரியராக மதன் கார்க்கி - முன்னாள் காதலி (மிருதன்), சிறந்த பெண் பாடகராக சித்ரா - கொஞ்சி பேசிட வேண்டாம் (சேதுபதி), சிறந்த ஆண் பாடகராக அனிருத் - செஞ்சிட்டாளே (ரெமோ) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த காமெடி நடிகராக யோகி பாபு (ஆண்டவன் கட்டளை), சிறந்த வில்லன் கதாபாத்திரமாக த்ரிஷா (கொடி), சிறந்த பெண் துணை நடிகராக ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை), சிறந்த ஆண் துணை நடிகராக பிரகாஷ் ராஜ் (மனிதன்), ஸ்பெஷல் ஜூரி அவார்ட் - பேபி நைனிகா (தெறி), சிறந்த நடிகர் (ஜூரி அவார்ட்) - மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த அறிமுக நடிகையாக ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த அறிமுக இயக்குநராக கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), சிறந்த நடிகையாக நயன்தாரா (இருமுகன்), சிறந்த நடிகராக சிவகார்த்திகேயன் (ரெமோ), சிறந்த இயக்குனராக அட்லீ (தெறி), சிறந்த திரைப்படமாக இறுதிச்சுற்று, சிறந்த எண்டெர்டெய்னராக விஜய் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்
பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்
பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.
இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.
கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும். இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.
இந்த நோய் வருவதற்கான காரணங்கள் …….
* தவறான உணவுப் பழக்கங்கள்.
* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.
* சுகாதாரமற்ற உள்ளாடைகள்.
* சுய இன்பம் காணுதல்.
* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.
* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.
* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.
* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.
* சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.
* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.
* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப்படுதல் உண்டாகிறது.
* மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.
* எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
நோயைத் தவிர்க்க :
* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
* சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறைகள்:
* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.
* மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.
* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.
இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
* தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.
* பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.
* சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
* இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
* ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
* நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.
* புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!
* மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.
* கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.
* புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.
* வேப்பமரப் பட்டை, பூ, வேர், காய், பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்!
* பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!
* உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி- இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு!
பெண்களுக்கான கல்வியே மறுக்கப்பட்டுவரும் நிலையில், திருநங்கைகளுக்கு மேற்படிப்பை இலவசமாக வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
நம் நாட்டில் திருநங்கைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே. திருநங்கைகளுக்கு மற்ற ஆண் பெண் பாலர்களுக்குக் கிடைப்பதுபோல எந்த ஒரு வாய்ப்பும் சலுகையும் கிடைப்பதில்லை. முக்கியமாக அவர்களை யாரும் மதிப்பதுகூட இல்லை. இந்நிலையில் சில திருநங்கைகள் மட்டும் முன்னேற்றம் கண்டு வருவது ஆங்காங்கே அதிசயமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் மற்றவர்களைப் போலவே திருநங்கைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில், திருநங்கைகளுக்கு மேற்கல்வியை இலவசமாக வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும் திருநங்கைகளின் படிப்புக்கான அனைத்துக் கட்டணங்களிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!
கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...