ஐபோன் விலையை மாடலுக்கு ஏற்ப 7.5 சதவீதம் வரை குறைத்து ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. புதிய விலை பட்டியலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஐபோன் 7 பிளஸ் 256 ஜிபி மாடல் ரூ.92,000ல் இருந்து ரூ.85,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் 32 ஜிபி ரூ.46,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலையை விட இது 6.2 சதவீதம் குறைவு. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது துவக்க நிலை மாடலான ஐபோன் எஸ்இ-ஐ பெங்களூருவில் விஸ்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கிறது. இது சுமார் 4 சதவீதம் விலை குறைந்துள்ளது.
ஐபோன் எஸ்இ 32ஜிபி மாடல் ரூ.27,200ல் இருந்து ரூ.26,000 ஆகவும், 128 ஜிபி மாடல் 6 சதவீதம் குறைந்து ரூ.35,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் விலையை குறைத்துள்ளதாக தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலைக்குறைப்பு இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. ஆனால், விலை குறைப்புக்கு பிறகும் ஐபோன்களின் விலை பிற உயர்ரக ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்தான். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 2.6 சதவீத இடத்தை ஐபோன்கள் பிடித்துள்ளன. ரூ.30,000க்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையில், ஐபோன்களின் பங்களிப்பு 43 சதவீதமாக உள்ளது.
FLIPKART
Monday, 3 July 2017
ஐபோன் விலை 7.5% வரை குறைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!
கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...
No comments:
Post a Comment