FLIPKART

Monday, 5 June 2017

வீல்சேரில்தான் வாழ்க்கை... ஆனாலும், வாயால் தேர்வெழுதி சாதித்த சிறுவன்!

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவுக்கு, ஸ்டீபன் ஹாக்கிங்தான் இன்ஸ்பிரேஷன். துகினுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்போலவே வீல்சேர் வாழ்க்கை. ஸ்டீபன் ஹாக்கிங்கை அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோய் 21 வயதில் தாக்கியது என்றால், துகினை கருவிலேயே தாக்கியது arthrogryposis multiplex congenita என்கிற நோய். இதனால், கருவில் இருக்கும்போது, கை, கால் மூட்டுகளில் வளர்ச்சி குன்றியது. பிறந்தது முதல் இருபது அறுவைசிகிச்சைகள் செய்தும் எந்தப் பலனுமில்லை. மண்ணைத் தொட்டது முதலே வீல்சேர் வாழ்க்கை. விவரம் தெரிந்தது முதல் ஸ்டீபன் ஹாக்கிங்தான் துகினின் ஹீரோ.

ஸ்டீபன் போலவே துகினும் படிப்பில் கெட்டி. பெற்றோருடன் சேர்ந்து பள்ளியும் அவரை ஊக்கப்படுத்தியது. காரக்பூரில் ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயாவில் துகின் படித்தார். வீட்டிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருந்தது பள்ளி. தினமும் பள்ளிக்குச் சென்று வருவதே துகினுக்குப் போராட்டமான விஷயம். கை செயலிழந்த நிலையில் எப்படி எழுதுவது? துகின் அதற்கும் ஒரு விடை கண்டார். பேனாவை வாயில் கவ்விப் பிடித்து எழுதக் கற்றுக்கொண்டார்.
அப்படித்தான் சி.பி.எஸ்.இ தேர்வும் எழுதினார். துகினுக்காக எழுத்தர் வழங்கப்படவில்லை. முழுத்தேர்வையும் வாயில் பேனா பிடித்தபடி எழுதியிருந்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் நேரம் மட்டும் வழங்கப்பட்டது. எழுதுவது மட்டுமல்ல, செல்போனை இயக்குவதிலிருந்து பல விஷயங்களை வாயினாலேயே செய்ய கற்றுக்கொண்டார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வில், துகின் 88 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்று அசத்தியிருக்கிறார். இதனால், பெற்றோரும் துகினும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். துகினின் இலக்கு 95 சதவிகிதமாக இருந்தது. மதிப்பெண் குறைந்தது சற்று வருத்தத்தைத் தந்தாலும், மேற்படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகக் கூறுகிறார். ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் ஐஐடி நுழைவுத்தேர்வுக்காகத் தன்னைத் தயார்படுத்திவருகிறார்.
துகினின் சாதனையைப் பாரட்டி மேற்குவங்கத்தைச் சேர்ந்த தீனபந்து தொண்டு நிறுவனம், லேப்டாப் மற்று டெலெஸ்கோப் ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறது. துகினைப் பற்றிய குறும்படம் ஒன்றை, பிரபல இயக்குநர் மோனலிஸா தாஸ் குப்தா இயக்கிவருகிறார். கோட்டாவில் உள்ள ஆலென் கரியர் இன்ஸ்டிட்யூட், ஐஐடி பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளது. இதையடுத்து, துகினின் பெற்றோர் படிப்பு முடியும் வரை கோட்டாவில் வசிக்கத் திட்டமிட்டுள்ளனர். '' ஸ்டீபன் ஹாக்கிங்போல ஆக வேண்டும். வருங்காலத்தில் ஐஐடி-யில் சேர வேண்டும்'' என உற்சாகத்துடன் கூறும் துகின், கடந்த 2012-ம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும், 2013-ம் ஆண்டு சிறந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைக்கான விருதையும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றிருக்கிறார்.

துகின் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ''ஸ்டீபன் ஹாக்கிங், துகின் இருவரையும் தாக்கிய நோய்கள் வெவ்வேறானவை. ஆனால், இருவரது மூளை வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால், இதுபோன்றோருக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்'' என்கின்றனர்.
துகினின் தந்தை சமிரான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார். தாயார் மத்திய அரசின் கல்வித் துறையில் பணியில் இருந்தார். துகினுக்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டார். '' துகின்தான் எங்கள் உலகம். அவனைவிட எங்களுக்கு வேறு எதுவும் முக்கியம் அல்ல. இன்னோரு குழந்தை பிறந்து, அது நல்ல நிலையில் இருந்தால் துகினின் மனம் பாதிக்கப்படும் என்பதற்காக இரண்டாவது குழந்தைகூட நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை'' என்கிறார் அவரது தாய்.

Sunday, 4 June 2017

இந்தியா - பாகி. போட்டி: புது அவதாரம் எடுக்கும் சச்சின்!

  • இந்தியா- பாகி. எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
  • இந்நிலையில், தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் புது அவதாரம் எடுத்துள்ளார்.
  • இன்று நடக்கவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் தனது வர்ணையாளர் பணியை ஆரம்பிக்க இருக்கிறார் சச்சின்

சீமானின் கோபத்தில் ஜி.வி. பிரகாஷ்!

  • நடிகர் ஜி.வி. பிரகாஷ், சீமான் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.
  • ஜி.வி.பிரகாஷ் மற்றும் சீமான் இணையும் இந்த படத்திற்கு ‘கோபம்‘ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
  • விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிருபராக மாறிய சமந்தா!

  • சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை ‘மகாநதி' என்ற பெயரில் படமாக எடுத்து வருகின்றன.
  • இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார். துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடிக்கிறார்.
  • இந்தப் படத்தில் சமந்தா நிருபராக நடிக்கிறார்.

காலா படத்தில் மணியின் 'தளபதி மொமன்ட்'?

  • காலா படத்தில் மம்மூட்டி கவுரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
  • பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா.
  • படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி துவங்கி மும்பையில் நடந்து வருகிறது.

தீ விபத்தில் நடிகை அதிதி ராவ் உயிர் தப்பினார்!

  • மும்பை ஆர்.கே.ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் உயிர் தப்பியுள்ளார்
  • இவர்,சமீபத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார்.
  • 'பூமி'என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மீண்டும் வருகிறான் 'ஆளவந்தான்'... இப்போது டிஜிட்டலில்!

  • 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்த படம் 'ஆளவந்தான்'. 
  • 17 ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படத்தை மீண்டும் வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு. 
  • டிஜிட்டலில் வெளியாகவுள்ள 'ஆளவந்தான்' படம், சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது!

அனுஷ்கா திருமணத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்!

  • அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவருடைய பெற்றோர் வற்புறுத்தி வருகிறார்களாம். 
  • தேவைப்பட்டால், திருமணத்திற்குப் பின்னும் நடித்துக் கொள்ளலாம் என்கிறார்களாம். 
  • ஆனால், அனுஷ்காவோ கைவசம் உள்ள படங்கள் முடியும் வரை திருமணப் பேச்சே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்!

ஹமாரா துஷ்மன் கோ... அதாவது பிரபாஸ் இந்திப் படத்தில் நடிக்கப் போறார்னு சொல்ல வந்தோம்!

பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களில் நடித்து புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் பிரபாஸ் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் தமிழ், தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்தது.
Entertainment
இந்நிலையில் சாஹோ என்ற இந்தி திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்று வதந்தி பரவியது. எனினும் இதற்கு இத்தனை நாள்களாக எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை.

இந்நிலையில் பாலிவுட் படத்தில் தான் நடிப்பது குறித்து தற்போது பிரபாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது கோடை விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் அமெரிக்கா சென்றுள்ள பிரபாஸ், அங்கிருந்து இந்தியா வந்தவுடன் சாஹோ படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் திரைக்கு வரவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படமாகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படத்தை சுஜீத் இயக்குகிறார், வம்சி கிருஷ்ணா ரெட்டி தயாரிக்கிறார்.

நான் ஏன் இந்த வயதில் நடிகை ஷெர்லியை மணந்தேன்?: வேலு பிரபாகரன் விளக்கம்

  • இந்த வயதில் திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை வேலு பிரபாகரன் தெரிவித்துள்ளார்
  • நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், சிவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன்
  • வேலு இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி படம் கடந்த 2ம் தேதி ரிலீஸானது

நான் போய் விவாகரத்து செய்வேன் என நினைக்கவே இல்லை: ஜீவாவின் ரீல் மனைவி பேட்டி

  • கணவர் கிரெய்கை விவாகரத்து செய்தது குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பூஜா ராமசந்திரன்.
  • காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!

  • சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வெயிட் போட உள்ளாராம்.
  • சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
  • நாக் அஷ்வின் இயக்கி வரும் மகாநதி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது.

சாம்சங் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவை பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம்.!

  • தற்போது கூகிள் ப்ளே ஸ்டோர் பயன்படுத்தி சாம்சங் டிஸ்பிளேவை அப்டேட் செய்துகொள்ளலாம்.
  • ஏஒடி அம்சத்துடன் சாம்சங் சாதனத்தை சொந்தமாக வைத்திருந்தால் கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் தேவையான பயன்பாடுகளை அவற்றில் செயல்படுத்த முடியும். மேலும் சாம்சங் பொருத்தமாட்டில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ஸ்மார்ட்போன் தகவல்களை பாதுகாக்க ஏதுவாக கைரேகை ஸ்கேனர் மட்டுமின்றி, கண்களை கொண்டே சாதனத்தை பாதுகாக்கும் ஐரிஸ் ஸ்கேனர் வசதிகளுடன், டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday, 3 June 2017

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

சமீபத்தில் ஒரு நம்பமுடியாத வேகமாக ராக்கெட்டின் உதவியுடன் அதாவது உலகிலேயே மிகவும் வேகமான ராக்கெட் ஒன்றின் மூலம் ஒரு இரகசிய செயற்கைக்கோள் விண்வெளியில் தொடங்கப்பட்டது. அது விண்வெளிக்குள் சென்று என்னென்ன உளவுகள் செய்யப்போகிறது என்பது நமக்கு தெரியாது, அதனை நம்மால் கண்காணிக்கவும் இயலாது, ஆனால், அது ஏவப்பட்ட போது பதிவான புகைப்படங்களை நம்மால் காண முடியும்.
ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!
அட்லஸ்-5 தான் அந்த உலகின் மிகப்பெரிய, மிக வேகமான யூ.எல்.ஏ.யின் மற்றொரு பெரிய ராக்கெட் ஆகும், இருப்பினும் டெல்டா 4 போன்று மிகவும் பெரியது அல்ல. கடந்த 2006-ஆம் ஆண்டில், இதே மாதிரியான ஒரு ராக்கெட் வேகத்தில் ஒரு புதிய எல்லையை தொட்டது அதாவது மணிக்கு 47,000 மைல்கள் வெளியீட்டு வேகம் சென்று முந்தைய உலக சாதனையை முறியடித்தது

ஐபோன் 8 லீக்ஸ் : டிஸ்பிளே அளவீடுகள்.!


ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடுஅறிவிப்பு நடக்க சில மாதங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும் அவற்றில் ஐபோன் 8 பற்றிய முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை ஐபோன் 8 தொடர்பான கசிவுகள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. ஐபோன் 8 லீக்ஸ் : டிஸ்பிளே அளவீடுகள்.! ஐபோன் 8 இன்ட்பில்ட் டச் ஐடி சென்சார் இணைந்து ஒரு ஓல்இடி காட்சி இதனுடன் அமைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட சில மாதங்கள் முன்னதாகவே ஐபோன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு துவங்குகிறது என்றும், இம்முறை 300 சதவிகிதம் வரை கூடுதலான சாதனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலாண்டு மொத்த ஐபோன்களின் எண்ணிக்கை 45 மில்லியனில் இருந்து 48 மல்லியன் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபோன் 8 வெளியாக இருக்கும் நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளில் ஐபோன் 8 போனினை எதிர்பார்க்கலாம். அதன் படி ஐபோன் 8இல் 3டி டூயல் லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு வழங்கப்படலாம். இதற்கென ஆப்பிள் நிறுவனம் லின்க்ஸ் எனும் இஸ்ரேலிய நிறுவனத்தை சமீபத்தில் கைப்பற்றியது. கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 பிளஸ், மற்றும் கூகிள் பிக்சல் போன்ற மற்ற பிரபல ஸ்மார்ட்போன்களை விட மிக அதிகமான செயல்திறன் ஆற்றலைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என அந்நிறுவனம் கூறியு

ஸ்ரீதேவியின் 'மாம்' டிரைலர்!

  • ஸ்ரீதேவி நடிப்பில் ரவி உத்யவார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாம்'.
  • இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது
  • இப்படத்தை ஸ்ரீதேவின் கணவர் போனிகபூர் தயாரிக்க, ஏ.ஆர். இசையமைத்துள்ளார்.

விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்

  • ஸ்ரீஹரிகோட்டா : இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வ மையத்தில் இருந்து நாளை (ஜூன் 05) மாலை 5.28 க்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் இன்று (ஜூன் 04) பிற்பகல் 3.58 மணிக்கு துவங்குகிறது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் செல்ல உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்துவதுடன், விண்ணிற்கு மனிதர்களையும் அனுப்ப முடியும்.


Thursday, 1 June 2017

தாய்மை

ஒரு பெண் தன்னை மறந்து தன்
குழந்தை தனத்தை ஒரு ஆணிடம் வெளிப்படுத்துகிறாள் என்றால்
அங்கு அவள் தாயின்
பாசத்தை உணர்கிறாள்!

Thenpandi Thendral S P Balasubranaiam

https://m.facebook.com/story.php?story_fbid=1536155533101450&id=437557309627950

இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!

கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...